இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் கடந்த இரவு ஏவுகணை தாக்குதலை செய்துள்ளது. ஈரான் சுமார் 180 கணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த ஏவுகளைகளில் எவ்வளவு இஸ்ரேலின் Iron Dome, David’s Sling, Arrow போன்ற ஏவுகணை எதிர்ப்பு கணைகளால் தடுக்கப்பட்டன, எவ்வளவு குறிகளை தாக்கின என்பது அறியப்படவில்லை. ஆனால் கடந்த தாக்குதலை போல் அன்றி இம்முறை பல கணைகள் குறிகளை தங்கியுள்ளன.

ஈரானின் ஒரு ஏவுகணை Herzliya நகரில் உள்ள மொசாட் உளவு படையின் தலைமையகத்துக்கு அண்மையில் விழுந்துள்ளது. இஸ்ரேலின் Nevatim, Tel Nof ஆகிய விமானப்படை தளங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் விழுந்துள்ளன.

ஈரான் உள்ளூரில் தயாரித்த தனது Fattah என்ற ஒலியிலும் வேகமாக செல்லும் ஏவுகணையை இம்முறை பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு வாயே திறவாத அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கு நாடுகள் வழமைபோல் ஈரானின் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளன.