எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் பொங்கலுக்கு தீர்வு, தீபாவளிக்கு தீர்வு என்று ஊளையிட்ட தீர்வு இன்று வரை மக்களுக்கு கிடைக்கவில்லை.
அவ்வாறே ரமழானுக்கு முன் காசாவில் யுத்த நிறுத்தம், ரமழானுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம் என்று மேற்கு நாடுகள் ஊளையிட்டாலும் இதுவரை காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை. குறிப்பாக சனாதிபதி பைடென் கேட்ட யுத்த நிறுத்தங்களை இஸ்ரேல் உதாசீனம் செய்தது.
அதே மேற்கு நாடுகள் தற்போது இஸ்ரேல்-ஹெஸ்புல்லா சண்டைக்கும் 21 தின யுத்த நிறுத்தம் என்று காவடி தூக்கியுள்ளன.
அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா, ஜப்பான், கட்டார், சவுதி, UAE ஆகிய நாடுகளே கூட்டாக கையொப்பம் இட்டு இஸ்ரேல்-ஹெஸ்புல்லா யுத்தத்தை 21 தினங்களுக்கு நிறுத்த கேடுள்ளன.
ஆனால் இஸ்ரேல் செய்யும் யுத்தங்களுக்கு தேவையான ஆயுதம், பணம், உளவு, அரசியல் ஆதரவு ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா தடையின்றி வழங்கும்.