மியன்மார் போராளிகளின் உறவை நாடும் இந்தியா 

மியன்மார் போராளிகளின் உறவை நாடும் இந்தியா 

இதுவரை மியன்மாரில் (பர்மா) இராணுவ ஆட்சி செய்யும் இராணுவத்துடன் மட்டும் உறவுகளை கொண்டிருந்த இந்தியா தற்போது அந்த இராணுவத்தை எதிர்த்து போராடும் போராளி குழுக்களுடனும் உறவை ஆரம்பிக்க முனைகிறது.

மியன்மாருடன் சுமார் 1,650 km எல்லையை கொண்ட இந்தியா குறைந்தது இந்திய எல்லையோரம் ஆதிக்கத்தில் உள்ள Chin, Rakhine, Kachin போராளி குழுக்களுடன் உறவை கொண்டிருப்பது அவசியமாகிறது.

இந்த குழுக்களை இந்திய அரசின் பணத்தில் இயங்கும் Indian Council of World Affairs (ICWA) நவம்பர் மாத நடுப்பகுதியில் டெல்லிக்கு அழைக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஒரு ICWA உறுப்பினர்.

மியன்மார் இராணுவத்தை முற்றாக சீனா பக்கம் தள்ளாமல் இருப்பதுவும் இந்திய நலனுக்கு அவசியம்.

மியன்மார் Kaladan துறைமுக அபிவிருத்தியில் இந்தியா $400 மில்லியன் முதலிட்டுள்ளது.