இலங்கையின் முதல் இடதுசாரி சனாதிபதி அனுர?

இலங்கையின் முதல் இடதுசாரி சனாதிபதி அனுர?

அனுர குமார திசாநாயக்க (AKD) தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது இடதுசாரி சனாதிபதி ஆகவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான (x) மற்றும் முதல் விருப்பு வாக்குகள் (1) அனைத்தும் எண்ணிய நிலையில் அனுர 42.31% வாக்குகளையும், சஜித் 32.76% வாக்குகளையும், ரணில் 17.27% வாக்குகளையும், ஏனையோர் மிக குறைந்த அளவு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

எவரும் 50% வாக்குகள் பெறாத நிலையில் அனுர, சஜித் ஆகிய இருவரையும் தவிர்த்து ஏனையோருக்கு கிடைத்த வாக்குகளில் அனுரவுக்கும், சஜித்துக்கும் கிடைக்கும் இரண்டாம் விருப்பு வாக்குகள் (2) எண்ணப்பட்டு புதிய மொத்தம் கணிக்கப்படும். புதிய மொத்தத்தில் முன்னிலையில் உள்ளவர் சனாதிபதி ஆவார்.

அனுர சனாதிபதியாக வெல்வது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரிய ஏமாற்றமாகும். குறிப்பாக பங்களாதேஷில் இந்தியாவின் செல்வாக்கில் ஆட்சி செய்த பிரதமர் Hasina ஆர்பாட்டங்களால் விரட்டி அடிக்கப்பட்ட பின் தற்போது இலங்கையிலும் இந்திய ஆதரவு ரணில் விரட்டப்பட்டுள்ளார்.

அனுராவின் JVP முன்னர் செய்த புரட்சிகளை சிறிமா இந்திய உதவியுடனேயே அடக்கி இருந்தார். அக்காலம் கரைந்து போயிருந்தாலும் இந்தியா இலங்கை இடதுசாரிகளுடன் என்றைக்குமே உறவை புதுப்பிக்கவில்லை.