அடிமைகள் போல் விற்கப்பட்ட தென் கொரிய தத்தெடுப்புகள்

அடிமைகள் போல் விற்கப்பட்ட தென் கொரிய தத்தெடுப்புகள்

1970 களிலும் 1980 களிலும் தத்தெடுப்பு என்ற பெயரில் திருடப்பட்ட பல்லாயிரம் தென் கொரிய சிறுவர்கள் அடிமைகள் போல் மேற்கு நாடுகளின் தத்தெடுப்போருக்கு வழங்கப்படுள்ளன என The Associated Press மற்றும் PBS Frontline செய்தி நிறுவனங்களின் ஆய்வுகள் அறிந்துள்ளன.

1975ம் ஆண்டு ஜூலை மாதம் Choi Young-ja என்ற சிறுவனும் வேறு சில சிறுவர்களும் கிருமி அழிப்பு வாகனம் ஒன்றின் பின்னே, வாகனத்தில் இருந்து வரும் புகையை பார்க்க ஓடினர். ஆனால் அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை.

மேற்படி சிறுவன் 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் நோர்வே குடும்பம் ஒன்றால் தத்து எடுக்கப்படுள்ளான். இவனை (தற்போது 52 வயது) திருடியோர் இவன் ஒரு அநாதை என்று பொய்யாக பதிந்து உள்ளனர்.

இக்காலத்தில் சுமார் 200,000 தென் கொரிய சிறுவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, அஸ்ரேலியா ஆகிய இடங்களின் குடும்பங்களால் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். அதில் பெருந்தொகை திருடப்பட்ட சிறுவர்களே.

இவ்வாறு திருட்டு நிகழ்வதை தென் கொரிய அரசும் மேற்கு நாடுகளும் அறிந்திருந்தும் அவற்றை தடை செய்யவில்லை. பதிலுக்கு மேற்கு நாடுகள் தென் கொரியாவை தொடர்ந்தும் சிறுவர்களை அனுப்ப நெருக்கி உள்ளன.

இந்த அடிமை வியாபாரத்தில் பிரதானமானது Holt அமைப்பே. 1950 களில் Harry Holt என்ற அமெரிக்க கமக்கார கிறிஸ்தவர் தனது மனைவி Bertha வுடன் கடவுளின் வேண்டுகோளுக்கு இணங்க தென் கொரியா சென்று தனக்கு 8 சிறுவர்களையும், தனது நபர்களுக்கு 4 சிறுவர்களையும் எடுத்து வந்துள்ளார். பின்னர் Holt நிறுவனமே மிக பெரிய அளவில் குளறுபடி நிறைந்த கொரியன் தத்தெடுப்பு நிறுவனம் ஆகியது.

நெதர்லாந்து கடந்த மே மாதம் முதல் வெளிநாட்டு சிறுவர்களை தத்தெடுப்பதை தடை செய்துள்ளது.

https://apnews.com/article/south-korean-adoptions-investigation-united-states-europe-67d6bb03fddede7dcca199c2e3cd486e