வெனிசுவேலாவில் அமெரிக்க Navy SEAL உட்பட 6 பேர் கைது

வெனிசுவேலாவில் அமெரிக்க Navy SEAL உட்பட 6 பேர் கைது

வெனிசுவேலாவில் (Venezuela) ஒரு அமெரிக்க கடல் படையின் விசேட பிரிவான Navy SEAL (Navy Sea, Air and Land team) அணி உறுப்பினர் உட்பட 6 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro) என்ற வெனிசுவேலா சனாதிபதியை படுகொலை செய்ய அமெரிக்க சி.ஐ.ஏ ஆல் அனுப்பப்பட்டவர்கள் என்கிறது வெனிசுவேலா அரசு. 

மேற்படி குற்றச்சாட்டை மறுக்கிறது அமெரிக்கா. ஆனால் ஏன் அமெரிக்கர்கள் வெனிசுவேலா சென்றார்கள் என்று கூறவில்லை.

அமெரிக்க SEAL உறுப்பினரான Wilbert Castaneda, மற்றும் அமெரிக்கர்களான David Estrella, Aaron Barrett Logan, ஸ்பெயின் நாட்வர்களான Jose Maria Basoa Valdovinos, Andres Martinez Adasme, Czech நாட்டவரான Jan Darmovzal ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் இருந்து 400 அமெரிக்க துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக வெனிசுவேலா கூறியுள்ளது.

வெனிசுவேலாவும் அமெரிக்காவும் விரோத நாடுகள், கியூபாவையும் அமெரிக்காவையும் போல.