2028ம் ஆண்டு செவ்வாயில் சீனா மண் எடுக்க பயணம்

2028ம் ஆண்டு செவ்வாயில் சீனா மண் எடுக்க பயணம்

2028ம் ஆண்டளவில் தாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து மண் (soil) எடுக்கும் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதை 2030ம் ஆண்டவிலேயே செய்ய முன்னர் சீனா அறிவித்து இருந்தாலும் பயணம் 2 ஆண்டுகள் முன்னதாக இடம்பெறவுள்ளது. மேற்படி மாதிரி 2031ம் ஆண்டே பூமியை அடையும்.

1971ம் ஆண்டு சோவியத் செவ்வாயில் தரையிறங்கி இருந்தாலும் ஆய்வுகள் எதையும் பெரிதளவில் செய்யவில்லை. அது ஒருவழி பயணம் மட்டுமே.

1976ம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் சென்றது. ஆனால் அதுவும் ஒருவழி பயணம் மட்டுமே. 2021ம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய Perseverance செவ்வாயில் மாதிரிகளை சேகரித்தாலும் அவற்றை பூமிக்கு எடுத்து வர திடமான திட்டம் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா இன்னோர் முயற்சியையும் அதன் செலவு ($11 பில்லியன்) காரணமாகவும், 2040ம் ஆண்டளவிலேயே அது சாத்தியம் என்றதாலும் கைவிட்டு இருந்தது.

2021ம் ஆண்டு சீனாவின் Zhurong செவ்வாயின் தரையில் இறங்கி இருந்தது. அதுவும் ஒருவழி பயணம் மட்டுமே. சீனாவின் புதிய முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் அதுவே செவ்வாய் கிரகத்துக்கான முதல் இருவழி பயணமாகும்.

பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான மிக குறைந்த தூரம் 50 மில்லியன் கிலோமீட்டர்.