இணையம் மூலம் இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை கேள்விகள் (tender) எதுவும் இன்றி VFS Global என்ற நிறுவனத்திற்கு வழங்க, நீதிமன்றம் பழைய Mobitel இணையத்தை பயன்படுத்த கூற, இரண்டும் சாத்தியம் இல்லாது போக இறுதியில் இலங்கை இலவச விசா வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த சாதனையை செய்த Public Security அமைச்சர் Tiran Alles கையில் இலங்கை மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதும் முற்றாக குழம்பி உள்ளது.
இதுவரை வழங்கப்படட பழைய கடவுச்சீட்டை கைவிட்டு புதிய e-passport வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த புதிய கடவுச்சீட்டில் chip உள்ளது.
ஆனால் புதிய கடவுச்சீட்டு தயாராகும் வரையான காலத்தில் வழங்க போதிய பழைய கடவுச்சீட்டுக்களை இலங்கை கொண்டிருக்கவில்லை. அதனால் தற்போது கடவுச்சீட்டு பெறமுடியாத நிலை தோன்றியுள்ளது.
நெருக்கடியை கையாள தற்போது chip இன்றிய புதிய கடவுச்சீட்டுகள் பெறப்படுகின்றன. அதுவும் அக்டோபர் 20ம் திகதி வரையிலே தயாராகும்.
புதிய கடவுச்சீட்டு ஒவ்வொன்றும் $5.06 க்கு Thales என்ற பின்லாந்து நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது.