உலகில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவின் 20% இந்தியாவில் 

உலகில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவின் 20% இந்தியாவில் 

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 50.2 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் வீசப்படுவதாகவும் அதில் 9.3 மில்லியன் தொன் , சுமார் 20%, இந்தியாவில் வீசப்படுவதாகவும் பிரித்தானியாவின் University of Leeds ஆய்வு கூறுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை சூழலில் எறியாது மீளப்பெற்று மீண்டும் பயன்படுத்த அல்லது தகுந்த முறையில் அழிக்க இந்தியாவில் தகுந்த கட்டுமானம் இல்லை என்று கூறப்படுகிறது.

2022ம் ஆண்டே இந்தியா ஒரு தடவை மட்டும் பயன்படும் 19 வகையான பிளாஸ்டிக்களை தடை செய்திருந்தது. ஆனாலும் அந்த சட்டம் முறைப்படி  பின்பற்றப்படுவதில்லை.

இந்த பிளாஸ்டிக் கால்வாய்கள், குழாய்கள், ஆறுகள் போன்றவற்றை அடைப்பதாலும் இந்தியாவின் வெள்ளப்பெருக்கு பாதிப்பு உக்கிரமாகிறது.

முன்னர் சீனா அதிகம் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி இருந்தாலும் அங்கு 15 ஆண்டுகளாக நடைமுறை செய்யப்பட்ட புதிய திட்டங்கள் அங்கு வீசப்படும் கழிவுகளின் அளவை ஆண்டுக்கு 2.8 மில்லியன் தொன் ஆக குறைத்துள்ளது.

நைஜீரியா 3.5 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகளையும், இந்தோனேசியா 3.4 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசுகின்றன. பிரித்தானியா 4,000 தொன் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுகிறது.