இஸ்ரேல் அணுகினால் கைதிகளை சுட ஹமாஸ் உத்தரவு 

இஸ்ரேல் அணுகினால் கைதிகளை சுட ஹமாஸ் உத்தரவு 

ஹமாஸ் தற்போது உயிருடன் வைத்திருக்கும் கைதிகளை இஸ்ரேல் படைகள் மீட்க அணுகினால் உடனடியாக கைதிகளை சுடுமாறு ஹமாஸ் கைதிகளை காவல் செய்வோருக்கு ஹமாஸ் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு தான் விரும்பியபடி கண்மூடித்தனமாக காசாவை தாக்கி அழிக்க இடராக இருக்கும் ஒரே தடை தற்போதும் ஹமாசின் கைகளில் உயிருடன் இருக்கும் பணய கைதிகளே.

இந்த கைதிகளை இஸ்ரேல் படைகள் மீட்டால் நெட்டன்யாகுவுக்கு யுத்த நிறுத்தத்துக்கு இணங்க அவசியம் இருக்காது.

அதனால் ஹமாசின் புதிய எச்சரிக்கை நெட்டன்யாகுவுக்கு நெருக்கடியாகி உள்ளது.

ஜூன் மாதம் Nuseirat என்ற இடத்தில் காவலில் இருந்தோர் உட்பட 274 பலஸ்தீனரை இஸ்ரேல் படைகள் கொலை செய்து 4 யூத கைதிகளை உயிருடன் மீட்டு இருந்தன.

ஆனால் கடந்த கிழமை 6 கைதிகளை இஸ்ரேல் படைகள் மீட்க முனைந்தபோது ஹமாஸ் 6 கைதிகளையும் கொலை செய்திருந்தது.

ஹமாசிடம் தற்போது சுமார் 100 கைதிகள் உயிருடன் உள்ளதாக கூறப்படுகிறது.