இலங்கை ஏப்ரல் மாதம் முதல் VFS Global என்ற இந்திய நிறுவனம் மூலம் விசா வழங்கும் பணியை செய்ய ஆரம்பித்து இருந்தது. முன்னர் குறைந்த செலவில் இலங்கை நிறுவனமான Mobitel வழங்கிய தரமான சேவையை கைவிட்டு அதிகமான கட்டணம் அறவிடும், அதிகமான தரவுகளை உள்வாங்கும் VFS சேவை மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை புதிய VFS இணையத்தை நிறுத்தி பழைய Mobitel இணையம் மூலம் விசா வழங்கலை செய்ய இடைக்கால கட்டளையிட்டது. இந்த கட்டளை விசயத்தை மேலும் குழப்பி உள்ளது.
Mobitel உடனடியாக சேவையை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்றாலும் அதன் இணையம் பழைய விசா வகைகளை, பழைய கட்டணத்துக்கு மட்டுமே வழங்க முடியும். ஆனால் புதிய gazette படி புதிய விசா வகைகளும், புதிய கட்டணங்களும் மட்டுமே சட்டப்படியானவை ஆகும்.
Mobitel புதிய விசா வகைகளையும், கட்டணங்களையும் தனது இணையத்தில் உள்ளடக்க பல மாதங்கள் தேவைப்படும்.
தற்போது e-visa சேவை முடங்கி உள்ளது.