சீனா தனது Change-5 என்ற விண்கலம் மூலம் சந்திரனின் மறு பக்கத்தில் இருந்து எடுத்து வந்த நில மாதிரியில் நீர் மூலக்கூறுகள் இருப்பது ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. அங்கு நீர் H2O அமைப்பில் இருந்துள்ளது.
சீனா அகழ்ந்த மாதிரியில் முன்னர் அறியப்படாத கனியம் ஒன்று இருந்துள்ளது. ULM-1 என்ற பெயர் கொண்ட இந்த கனியம் (NH4)MgCl3.6H2O என்ற இரசாயண அமைப்பை கொண்டது.
முன்னர் அமெரிக்கா, ரஷ்யா எடுத்த சந்திர மாதிரிகளில் நீர் மூலக்கூறு இருந்திருக்கவில்லை.
சந்திரனின் மத்திய கோட்டு பகுதியில் வெப்பநிலை 100 C வரை செல்வதால் நீர் விரைவில் ஆவியாகும். குளிர்மையான துருவ பகுதியில் விண்கலம் பயணிப்பது கடினம். சீனாவின் மாதிரி 43.1 பாகை அகலாங்கில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது.
அமெரிக்கா நடைமுறை செய்த Wolf Amendment சட்டப்படி அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவுடன் தொடர்பாடுவது குற்றம். ஆனால் சீனாவின் சந்திர மாதிரியில் சிறிதளவை பெறும் நோக்கில் தனது சட்டத்தை மாற்றி அமைக்க முனைகிறது அமெரிக்கா.