பங்களாதேஷ் பிரதமர் பதவி துறந்தார்

பங்களாதேஷ் பிரதமர் பதவி துறந்தார்

பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina அங்கு நிலவும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவி விலகியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர் பிரதமரின் வதிவிடத்துள் நுழைந்த பின் அந்த நாட்டு இராணுவ தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி செய்த Hasina, வயது 76, இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் காலத்தில் அங்கு பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்தது.

அரச தொழில்களின் 30% பங்கு 1971ம் ஆண்டு அக்கால கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்கு போராடியோரின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதையே மாணவர் எதிர்க்கின்றனர். விடுதலை அடைந்த கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகியது.

இந்த சட்டத்துக்கு பிரதமர் காரணம் அல்ல என்றாலும் அவர் ஆர்ப்பாட்டங்களை கையாண்ட வழிமுறைகள் அவருக்கு பாதகமாக முடிந்துள்ளது.

இவரின் தந்தை Sheikh Mujibur Rahman பங்களாதேஷின் Father of the Nation என்று அழைக்கப்படுபவர். இராணுவ சதி ஒன்றில் இவரின் குடும்பத்தில் அனைவரும் படுகொலை செய்யப்பட Hasina வும் இளைய சகோதரியும் மட்டும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தனர்.