அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜோர்டான், சுவீடன், இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் தமது நாட்டவரை உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளன. இஸ்ரேலுடனான யுத்தம் வடக்கே லெபனான் பக்கம் திரும்பலாம் என்ற அச்சமே மேற்படி அழைப்புக்கு காரணம்.
Air France, Lufthansa, Kuwaiti Airlines ஆகிய விமான சேவைகளும் லெபனானுக்கான சேவைகளை இடைநிறுத்தி உள்ளன.
இஸ்ரேல் Ismail Haniyeh என்ற ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரை ஈரானின் தலைநகர் தெகிரானில் வைத்து படுகொலை செய்ததே முறுகல் நிலைக்கு காரணம்.
வழமையாக பெய்ரூற்றில் இருந்து பாரிஸுக்கு ஒருவழி விமான சேவை கட்டணம் சுமார் $250 மட்டுமே. ஆனால் அத்தொகை தற்போது $2,500 ஆக உயர்ந்துள்ளது.