நேற்று வெள்ளி இலங்கை நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய இலங்கைக்கான விசா (e-visa) வழங்கல் பணிகளை செய்யும் பொறுப்பு இந்திய நிறுவனமான VFS Global இடம் இருந்து பறித்து மீண்டும் பழைய இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தற்போதைக்கு ஒரு இடைக்கால தீர்மானம் மட்டுமே. வழக்கு இறுதியில் உறுதியான தீர்ப்பு வழங்கப்படும்.
VFS மூல விசா வழங்கல் முறைக்கு எதிராக வழக்கு தொடுத்தோர் பகிரங்க கேள்வி மூலம் தகுந்த நிறுவனத்தை தெரிவு செய்யாது VFS Global நிறுவனத்துக்கு தவறான முறையில் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த சேவையால் VFS Global அடுத்த 16 ஆண்டுகளில் $2.75 பில்லியன் வருமானத்தை பெறும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை தாக்கல் செய்தோரில் இலங்கை உல்லாச பயணத்துறை அமைச்சர் Harin Fernando வும் ஒருவர்.