பிறப்பு குறைவால் சீனாவில் மூடப்படும் பாடசாலைகள் 

பிறப்பு குறைவால் சீனாவில் மூடப்படும் பாடசாலைகள் 

பிறப்பு வீதம் வேகமாக குறையும் சீனாவில் போதிய சிறுவர்கள் இல்லாமையால் அங்கு பெருமளவு பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ஒரு பிள்ளைக்கு மேல் குழந்தைகள் பெறுவதை குற்றமாக்கிய சீன அரசு தற்போது பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள அழைத்தாலும் புதிய சந்ததி குழந்தைகளை பெற மறுக்கின்றன.

Jiangxi மாநிலத்தில் இந்த ஆண்டு புதிதாக நியமனம் செய்யப்படும் pre-school, primary, secondary ஆசிரியர்களின் எண்ணிக்கை 54.7% ஆல் குறைக்கப்பட உள்ளது. இந்த மாநிலத்தில் 0 முதல் 15 வயதானோர் தொகை கடந்த 4 ஆண்டுகளாக குறைந்து வந்துள்ளது.

இந்த மாநிலத்தில் 100 மாணவர்களிலும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மூடப்பட உள்ளன. மூடப்பட உள்ள பாடசாலைகளின் தொகை மொத்த பாடசாலை எண்ணிக்கையின் 20% ஆகும்.

அருகில் உள்ள Hubei மாநிலத்தில் புதிய ஆசிரியர்களின் நியமனம் இம்முறை 20% ஆல் குறைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அருகில் உள்ள Hunan மாநிலத்தில் புதிய kindergartens அமைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு இங்கே kindergarten சிறுவர்களின் எண்ணிக்கை 14.79% குறைந்து இருந்தது.