அமெரிக்கா, ரஷ்யா மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம்

அமெரிக்கா, ரஷ்யா மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம்

அமெரிக்கா, ரஷ்யா இடையே இன்று மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம் இடம்பெறுகிறது. இந்த இணக்கப்படி மொத்தம் 26 கைதிகள் கைமாற்றம் செய்யப்படுவர்.

அமெரிக்கா, ஜேர்மனி, போலந்து, Slovenia, நோர்வே, ரஷ்யா, பெலரூஸ் ஆகிய நாடுகளில் உள்ள 26 கைதிகள் தமது நாடுகளிடம் கையளிக்கப்படுவர். இந்த கைதிகளில் Evan Gershkovich, Paul Whelan, Alsu Kurmasheva, Vadim Krasikov ஆகியோரும் அடங்குவர்.

சில கைதிகள் துருக்கி மூலம் கைமாற்றம் செய்யப்படுவர். ஏற்கனவே ரஷ்யாவின் விமானம் ஒன்று துருக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த ரஷ்ய கைதி Vadim Krasikov துருக்கி நோக்கி செல்கிறார்.

சனாதிபதி பைடென் இந்த கைதிகள் கைமாற்றத்தை தனது ஆட்சிக்கால சாதனைகளில் ஒன்றாக கருத இறுதி நேரத்தில் செய்திருக்கலாம்.