ஒலிம்பிக் anti-doping அமைப்புள் அமெரிக்க, சீன சண்டை 

ஒலிம்பிக் anti-doping அமைப்புள் அமெரிக்க, சீன சண்டை 

World Anti-Doping Agency (WADA) ஒலிம்பிக் போட்டியாளர் ஊக்க போதையை பயன்படுத்துவதை தடுக்க பரிசோதனைகள் செய்யும் பொது அமைப்பு. இந்த அமைப்பு தற்போது அமெரிக்க, சீன சண்டையில் அகப்பட்டு இழுபடுகிறது.

சீன போட்டியாளர் ஊக்க போதை பயன்படுத்துவதை அறியும் WADA பரிசோதனை தரவுகளை அழிகிறது என்று அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். அவற்றை மறுக்கும் WADA குற்றச்சாட்டை நிரூபிக்க கேட்டுள்ளது.

அதேநேரம் WADA சீன போட்டியாளரை மிகையான அளவில் பரிசோதனை செய்து துன்புறுத்துவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 31 சீன நீச்சல் போட்டியாளரை WADA ஜனவரி முதல் சராசரியாக 21 தடவைகள் பரிசோதனை செய்துள்ளது. அதே காலத்தில் 41 அஸ்ரேலிய நீச்சல் போட்டியாளரை சராசரியாக 4 தடவைகளும், 46 அமெரிக்க நீச்சல் போட்டியாளரை சராசரியாக 6 தடவைகளும் மட்டுமே பரிசோதனை செய்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தற்போது முன்னணியில் உள்ள நாடுகள்: