Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan Heights பகுதியில் உள்ள Majdal Shams நகர் விளையாட்டு மைதானம் ஒன்றில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலியாகி உள்ளனர். பலியானோர் 10 முதல் 20 வயதினர் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு மேலும் 20 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சிரியாவுக்கு சொந்தமான Golan Heights பகுதியை இஸ்ரேல் 1967ம் ஆண்டு யுத்தத்தில் கைப்பற்றி இருந்தது.

கடந்த அக்டோபர் 7ம் திகதிக்கு பின் இஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவே மிகப்பெரிய தாக்குதலாகும்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் லெபனானின் ஹெஸ்புல்லா குழு மீது குற்றம் சுமத்தினாலும் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணை ஒன்றே காரணம் என்கிறது ஹெஸ்புல்லா.

அதேவேளை சனிக்கிழமை இஸ்ரேல் காசா பாடசாலை ஒன்றின் மீது செய்த தாக்குதலுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளையோர்.