அமெரிக்காவின் Seattle நகரில் போலீஸ் கார் ஒன்று மோதியதால் மரணித்த இந்திய பெண் ஒருவரை அவமதித்த Daniel Auderer என்ற போலீசார் புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் Jaahnavi Kandula என்ற இந்திய பெண் பாதசாரிகள் கடவையில் வீதி ஒன்றை கடக்கும்போது வேறு ஒரு அழைப்புக்கு சென்ற Seattle போலீஸ் கார் ஒன்று மோதியதால் மரணமாகி இருந்தார். மோதிய போலீஸ் கார் 40 km/h வேக கட்டுப்பாடு கொண்ட வீதியில் 119 km/h வேகத்தில் சென்றுள்ளார். மோதும் வேளையில் மோதிய காரின் வேகம் 101 km/h ஆக இருந்துள்ளது. பல்கலைக்கழக மாணவியான Kandula அவ்விடத்திலேயே மரணமானார்.
இந்த விபத்தை விசாரிக்க சென்ற Daniel Auderer விபத்தை தனது அதிகாரி ஒருவருக்கு விபரிக்கும்போது மரணித்த பெண்ணை அவமதித்து பேசி, பெரிதாக சிரித்துள்ளார். தனது body cam அவர் பேசியதை பதிவு செய்துள்ளது.
மரணித்த பெண் “just 26” வயது கொண்டவர் என்றும், “limited value” கொண்டவர் என்றும் கூறியுள்ளார். Auderer கூற்று “yeah, just write a check, yeah, $11,000 she was 26 anyway, she had limited value” என்றுள்ளது.