அமெரிக்கா உலகுக்கு சனநாயக, நீதி உபதேசம், தன்னுள் குழப்பம்

அமெரிக்கா உலகுக்கு சனநாயக, நீதி உபதேசம், தன்னுள் குழப்பம்

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அமெரிக்க காங்கிரசில் பைடெனின் வெற்றி உறுதி செய்யப்படும் நிகழ்வை பல்லாயிரம் ரம்ப் ஆதரவாளர் வன்முறை மூலம் தடுக்க முனைந்தனர். அங்கே 5 பேர் பலியாகினர்.

அந்த வன்முறையில் ரம்பின் பங்களிப்புக்கு எதிராகவும் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தான் சனாதிபதி ஆகையால் அந்த குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து விலக்கு (immunity) உடையவர் என்று வாதாடியுள்ளார்.

கீழ் நீதிமன்றம் ரம்புக்கு அவ்வாறு விலக்கு (immunity) இல்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது.

ஆனால் இதை விசாரித்த 6 அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரம்புக்கு சில விதிவிலக்கு உண்டு என்று தீர்ப்பு கூறியுள்ளனர். இந்த 6 நீதிபதிகளும் Republican சனாதிபதிகளால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள். அதிலும் 3 பேர் ரம்பினால் அமர்த்தப்பட்டவர்கள். 

மொத்தம் 9 நீதிபதிகளில் இந்த தீர்ப்பை எதிர்த்த ஏனைய 3 பேரும் Democratic கட்சி சனாதிபதிகளால் அமர்த்தப்பட்டவர்கள். மூவரில் ஒருவரான Sonia Sotomayor தனது கூற்றில் “Orders the Navy’s Seal Team 6 to assassinate a political ரியல்? Immune”, “Organizes a military coup to hold onto power? Immune”, “Takes a bribe in exchange for a pardon? Immune” என்றெல்லாம் நையாண்டி செய்துள்ளார்.

அதனால் உயர் நீதிமன்றம் வழங்கிய மேற்படி தீர்ப்பும் அரசியல்வாதிகள் வழங்கிய தீர்ப்பு போலவே உள்ளது.