IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF (International Monitory Fund) ஆபிரிக்க நாடான கென்யா (Kenya) மீது திணிக்கும் புதிய வரிகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் வேறு அரசியல் கட்சிகள் இருப்பதாக தெரியவில்லை.

சுமார் ஒரு கிழமையாக இடம்பெறும் மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர். 

சில ஆர்ப்பாட்டக்காரர் பாராளுமன்றத்துள் நுழைந்து தீயிட்டுள்ளனர். IMF, World Bank ஆகியவற்றின் கென்யா அலுவலகங்களையும் முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர் கேட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின் பாண், சமையல் எண்ணெய் போன்றவை மீதான புதிய வரியை தவிர்க்க அரசு இணங்கி இருந்தது. ஆனாலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

>>>>>
சற்றுமுன் சனாதிபதி Ruto தான் இந்த வரி அதிகரிப்பு சட்டத்தில் கையொப்பம் இடமாட்டேன் என்று கூறி, வரி அதிகரிப்புகளை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தை கேட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
>>>>>