கையை இழந்த இந்திய தொழிலாளி மரணத்தால் ஆர்ப்பாட்டம்

கையை இழந்த இந்திய தொழிலாளி மரணத்தால் ஆர்ப்பாட்டம்

இத்தாலி தோட்டம் ஒன்றில் தொழில் செய்த Satnam Singh என்ற 31 இந்திய தொழிலாளியின் மரணம் இரண்டு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்துள்ளது.

இந்தியரான இவர் சட்டப்படி பதிவு செய்யாது, இத்தாலியின் வதிவுரிமை பெறாது சுமார் 2 ஆண்டுகளாக தோட்ட வேலைகள் செய்து வந்துள்ளார்.

கடந்த திங்கள் இவர் இத்தாலியின் Latina பகுதி தோட்டம் ஒன்றில் தொழில் செய்யும் வேளையில் இயந்திரம் ஒன்றுள் அகப்பட்டு வலது கை துண்டாடப்பட்டது.

இவருக்கு உடன் மருத்துவம் வழங்காது இவரின் குடியிருப்பு அருகே வீதியில் கைவிடப்பட்டார். உரிய நேரத்தில் மருத்துவம் பெறாத இவர் சில தினங்களின் பின் மரணமானார்.

இத்தாலிய பிரதமர், தொழில் சங்கத்தினர் இவரின் மரணத்தால் கடும் விசனம் கொண்டுள்ளனர். சனிக்கிழமை இந்த விசயம் தொடர்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் இத்தாலியில்  திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் சுமார் 230,000 வெளிநாட்டவர் சட்டவிரோதமாக தொழில் செய்வதாக கூறப்படுகிறது.