சில நூறு ஹஜ் பயணிகள் வெப்ப கொடுமைக்கு பலி

சில நூறு ஹஜ் பயணிகள் வெப்ப கொடுமைக்கு பலி

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய தலமான மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்தோரில் சில நூறு  பயணிகள் அங்கு நிலவும் வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர்.

அங்கு வெப்பநிலை 49 C (அல்லது 120 F) ஆக இருந்துள்ளது. ஹஜ் இஸ்லாமிய (சந்திர) நாட்காட்டியை பயன்படுத்துவதால் சில ஆண்டுகளில் இந்த நிகழ்வு வெப்பமான காலங்களில் இடம்பெறும்.

இந்தோனேசியா தமது நாட்டவரில் குறைந்தது 165 பேர் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது. ஜோர்டான் நாட்டவர் 41 பேரும், துனிசியா நாட்டவர் 35 பேரும், ஈரானியர் 11 பேரும் கூடவே பலியாகி உள்ளனர்.

மேலே குறிப்பிட்ட தொகைகள் பதிவு செய்து பயணித்தோரை மட்டுமே உள்ளடக்குகிறது. சிலர் பதிவு செய்யாது ஹஜ் பயணம் மேற்கொள்வதால் பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம்.

இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் பேர் ஹஜ் பயணம் செய்துள்ளனர். ஆண்டு ஒன்றில் சுமார் 21 மில்லியன் பேர் மெக்கா செல்வதால்  சவுதிக்கு சுமார் $30 பில்லியன் வருமானம் கிடைக்கிறது.