வட கொரியா சென்றார் பூட்டின், இரகசிய ஆயுத உடன்பாடு?

வட கொரியா சென்றார் பூட்டின், இரகசிய ஆயுத உடன்பாடு?

ரஷ்ய சனாதிபதி பூட்டின் (Putin) சுமார் 24 ஆண்டுகளின் பின் வட கொரியாவுக்கு இன்று புதன்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) பெரும் செங்கம்பள வரவேற்பு செய்துள்ளார்.

இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் தனியே உரையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும்  உரையாடிய விசயங்கள், அவர்களின் இணக்கப்பாடுகள் என்பன பகிரங்கம் செய்யப்படவில்லை. 

பூட்டின் தனது யூக்கிறேன் யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை பெற முனைந்திருக்கலாம் என்றும், கிம் அணுமின் நீர்மூழ்கி தயாரிக்கும் அறிவை பெற முனைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

யூக்கிறேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முழுமையாக ஆதரிக்கும் நாடுகளில் ஒன்று வட கொரியா. 

வட கொரியாவுக்கு பின் பூட்டின் வியட்நாம் செல்கிறார்.