ராஜீவின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதல் தடவையாக தேர்தலில் குதிக்கிறார். கேரளா மாநிலத்து Wayanad தேர்தல் தொகுதியிலேயே பிரியங்க போட்டியிட உள்ளார்.
கடந்த தேர்தலில் சகோதரன் ராகுல் காந்தி கேரளாவின் Wayanad தொகுதியிலும், உத்தர பிரதேசத்து Bareli தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி அடைந்திருந்தார். ஆனால் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும்.
அதனால் ராகுல் Bareli தொகுதியை கைக்கொண்டு, Wayanad தொகுதியை கைவிட அத்தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் இடம்பெறவுள்ளது. அதிலேயே பிரியங்கா போட்டியிடுகிறார்.
தாய் மேனகா, சகோதரன் ராகுல் ஆகியோரின் தேர்தல் பரப்புரைகளில் பிரியங்கா பங்கு கொண்டிருந்தாலும், தான் நேரடியாக போட்டியிடுவது இதுவே முதல் தடவை.
Wayanad நீண்டகால காங்கிரஸ் ஆதரவு கொண்ட தொகுதியானபடியால் பிரியங்காவின் வெற்றி இலகுவானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் ராகுலுக்கு மேலாக பிரியங்காவுக்கு ஆதரவு உண்டு.
1972ம் ஆண்டு பிறந்து, University of Delhi யில் BA, MA பட்டங்கள் பெற்ற பிரியங்கா 1997ம் ஆண்டு Robert Vadra என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு Raihan என்ற மகனும், Miraya என்ற மகளும் உண்டு.