முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது 2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் பரப்புரை காலத்திலும் பின் சனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் கடுமையாக அரபு/இஸ்லாமிய காழ்ப்பை கொட்டியிருந்தார்.
அப்போது ரம்பின் மருமகன், மகள் Ivanka வின் கணவர், ஒரு யூதர். Jared Kushner என்ற அந்த யூத மருமகன் ரம்பின் ஆட்சியில் வெள்ளைமாளிகை பதவிகளையும் கொண்டிருந்தார்.
2022ம் ஆண்டு Tiffany என்ற ரம்பின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் Michael Boulos என்ற லெபனான் என்ற நாட்டில் இருந்து அமெரிக்கா வந்திருந்த கிறீஸ்தவ அரபு ஒருவரின் (billionaire Massad Boulos) மகனை திருமணம் செய்திருந்தார்.
தற்போது காசா யுத்தம் காரணமாக சனாதிபதி பைடென் மீது வெறுப்பு கொண்டுள்ள Michigan மாநில அரபுகளின் வாக்குகளை கவரும் நோக்கில் ரம்ப் தனது அரபு சம்பந்தியை தேர்தல் பரப்புரைக்கு அழைத்துள்ளார்.
கிறீஸ்தவ அரபு குடும்பம் எவ்வளவுக்கு இஸ்லாமிய வாக்குகளை கைப்பற்றும் என்று கணிப்பிட முடியாது.