பரீட்சையில் உதவும் இந்திய பெற்றார்

ParentsHelpStudents

மாணவர் தாமாக பரீட்சைகளில் குளறுபடி செய்வது உண்டு. குதிரை ஓடுதல், copy அடித்தல் என பல நடைமுறைகள் அதில் அடங்கும். ஆனால் இந்தியாவில் இந்த கிழமை நடந்ததை அழகாக படம் பிடித்துள்ளார்கள்.
.
இந்த படத்தில் நீங்கள் காண்பது தமது பிள்ளைகளுக்கு பரீட்சை நேரத்தில் உதவும் பெற்றாரையே.நான்கு மாடிகளுக்கும் மேலாக வெளிப்புறமாக ஏறி இவர்கள் தமது பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். அவ்வாறு உதவுவதற்க்கு இவர்களிடம் போதிய அறிவு உள்ளதா அல்லது நிலத்தில் நிற்பவர்களிடம் வினாவை கூறி, பின் விடையை மாணவர்களிடம் சமர்ப்பிக்கிறார்களா என்பது தெரியாது.
.
இது நடந்தது இந்தியாவின் கிழக்கே உள்ள பீகார் மாநிலத்திலேயே. உள்ளே பரீட்சை எழுதுவோர் 10 ஆம் தர மாணவர். பொலிசார் அவ்விடத்தி இருந்தும் அவர்கள் இதை தடுக்க முன்வரவில்லையாம்.
.

பிந்திய செய்திகளின்படி இந்த பாடசாலையின் 600 மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டுளார்களாம். இந்த பரீட்சையை அந்த மாநிலத்தில் உள்ள 1200 பாடசாலைகளில் 1.4 மில்லியன் மாணவர் எழுதியுள்ளனர்.