குவைத் (Kuwait) அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 49 வெளிநாட்டு ஊழியர்கள் பலியாகி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்தியர் என்று கூறப்படுகிறது.
இந்த தீ புதன் காலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த மாடியில் அளவுக்கு அதிகமானோர் குடியிருந்தாகவும் கூறப்படுகிறது.
கேரளா முதலமைச்சர் Pinarayi Vijayan தனது மாநிலத்தவரும் மரணித்து உள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டினரும் இங்கு குடியிருந்துள்ளனர்.
Mangaf என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த தீக்கு கட்டிட உரிமையாளரின் பேராசையே காரணம் என்று குவைத் உதவி பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அவர் தனது கூற்றை விளக்கப்படுத்தவில்லை.
ஒரு வைத்தியசாலையில் 30 இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. மொத்தம் 47 பேர் இந்த வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை உடல்களை இந்தியா எடுத்துவரும் என்றும் கூறப்படுகிறது.
குவைத் தனியார் வேலைத்தள ஊழியர்களில் 2/3 பங்கு வெளிநாட்டவரே.