அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி ரம்ப் குற்றவாளி (convicted of crime) என்று நியூ யார்க் நீதிமன்றத்தின் 12 ஜுரிகளால் இன்று வியாழன் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு குற்றவாளியாக காணப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.
ரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்ட 12 குற்றங்களிலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். ஜூலை 11ம் திகதி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் காலத்தில் விபச்சாரி ஒருவருக்கு உண்மைகளை வெளியிடாது தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்கி பின் அதை மறைத்ததே ரம்ப் செய்த குற்றம்.
தற்போது சனாதிபதி பைடெனுக்கும் மேலாக ஆதரவு கொண்ட ரம்ப் மேற்படி குற்றவாளி தீர்ப்பால் தனது ஆதரவை இழப்பாரா அல்லது அவரின் ஆதரவு அதிகரிக்குமா என்பதை swing states மக்கள் பெரும்பாலும் தீர்மானிப்பர்.
நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்ப் வெற்றி பெற்றால் ஒரு குற்றவாளி அமெரிக்க சனாதிபதி பதவியை அடைவார். அமெரிக்காவில் இந்நிலை இதுவரை இடம்பெறவில்லை. அதனால் நவம்பர், டிசம்பர், தை மாதங்களில் அமெரிக்காவில் பெரும் குழப்பங்கள் இடம்பெறலாம்.
ரம்ப் தரப்பு விரைவில் குற்றவாளி தீர்ப்பை அப்பீல் செய்யும் என்று நம்பப்படுகிறது.