சீன சனாதிபதி தலைமையில் பெய்ஜிங் காசா மாநாடு

சீன சனாதிபதி தலைமையில் பெய்ஜிங் காசா மாநாடு

இன்று வியாழன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சீன சனாதிபதி தலைமையில் காசா யுத்தம் தொடர்பாக மாநாடு ஒன்று இடம்பெற்றுகிறது. அங்கு உரையாற்றிய சீ காசா மக்கள் முடிவு இன்றிய கொடுமையை அனுபவிக்க முடியாது என்றுள்ளார்.

அத்துடன் சுதந்திரமான பலஸ்தீனர் நாடும் அமைக்கப்படல் அவசியம் என்றும் சீன சனாதிபதி சீ கூறியுள்ளார்.

சீனாவும் அங்கு சென்ற அரபு தலைவர்களும் கூட்டாக ஒரு அறிக்கையையும் என்று கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.

எகிப்தின் சனாதிபதி, UAE சனாதிபதி, பஹ்ரைன் அரசர், துனிசிய சனாதிபதி ஆகியோர் உட்பட 22 மத்தியகிழக்கு தலைவர்களும், அதிகாரிகளும் தற்போது இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பெய்ஜிங் சென்றுள்ளனர்.

காசா உதவிகளுக்கு சீனா $70 மில்லியன் உதவி வழங்கவும் முன்வந்துள்ளது.