பிரான்சுக்கு எதிராக New Caledonia போராட்டம்

பிரான்சுக்கு எதிராக New Caledonia போராட்டம்

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள New Caledonia என்ற பசுபிக் கடல் தீவு தொகுதியில் வாழும் Kanaks மக்கள் பிரான்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2 போலீசார் உட்பட 6 பேர் கலவரங்களுக்கு பலியாகி உள்ளனர். அங்கு விரைந்த பிரான்சின் சனாதிபதி Macron கலவரத்தை அடக்க உறுதி கொண்டுள்ளார்.

சுமார் 270,000 மக்களை கொண்ட இந்த தீவு தொகுதியை பிரான்ஸ் 1853ம் ஆண்டில் கைப்பற்றி இருந்தது. தற்போதும் அது பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பூர்வீகமாக வாழும் Kanaks மக்கள் 40% சனத்தொகையை கொண்டுள்ளனர்.

சுதந்திரத்தை நாடும் Kanaks மக்களின் ஆளுமையை அழிக்கும் நோக்கில் கடந்த கிழமை பிரான்ஸ் புதிய சட்டம் ஒன்றை நடைமுறை செய்தது. அந்த சட்டம் அங்கு 10 ஆண்டுகளுக்கு மேல் வாழும் பிரஞ்சு மக்களுக்கு New Caledonia தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்கி இருந்தது. இதை Kanaks மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். பிரான்சில் இருந்து New Caledonia சுதந்திரம் அடைய வாக்கெடுப்பு நிகழ்த்தினால், மேற்படி புதிய பிரெஞ்சு வாக்காளர் மூலம் சுதந்திரத்தை தடுக்கலாம் என்பதே பிரான்சின் நோக்கம்.

1998ம் ஆண்டு பிரான்ஸ் செய்துகொண்ட Noumea Accord உடன்படிக்கையின்படி அங்கு பூர்வீகமாக வாழும் மக்களுக்கு மேலதிக அரசியல் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பின் சுமார் 40,000 பிரெஞ்சு மக்கள் அங்கு குடியேறி உள்ளனர். அதனால் Kanaks மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை நடைமுறையில் பொய்யாகி உள்ளது.

தற்போது 3,000 பிரெஞ்சு படையினர் அங்கு கலவரம் அடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தற்போது அவசரகால சட்டம் நடைமுறை செய்யப்படுள்ளது.