மோதிக்கு 8 தடவைகள் வாக்களித்த 17 வயது வாலிபன்

மோதிக்கு 8 தடவைகள் வாக்களித்த 17 வயது வாலிபன்

தற்போது இந்தியாவில் இடம்பெறும் தேர்தலில் வாக்களிக்கும் வயதை அடையாத 17 வயது வாலிபன் ஒருவன் 8 தடவைகள் கள்ளமாக மோதியின் பா. ஜ. கட்சியின் (BJP) Mukesh Rajput என்பவருக்கு வாக்களித்துள்ளான். இந்தியாவில் 18 வயதை அடைந்தவர் மட்டுமே வாக்களிக்கலாம்.

சட்டவிரோதமாக வாக்களித்தது மட்டுமன்றி அதை வீடியோ பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்து அவன் பெருமை கொண்டுள்ளான். இதைய அறிந்த எதிர் காட்சிகள் விசனம் கொள்ள, இந்திய தேர்தல் திணைக்களம் அந்த வாக்கெடுப்பு நிலையத்துக்கு இன்னோர் தேர்தலை அறிவித்துள்ளது.

பின்னர் மேற்படி வாலிபன் கைது செய்யப்பட்டதுடன், அந்த வாக்களிப்பு நிலையத்தில் இருந்த அதிகாரிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி வாலிபனை தேர்தல் நிலைய அதிகாரிகளே அழைத்து சென்றதாக அவனின் தந்தையார் கூறியுள்ளார்.

பா. ஜ. ஆதிக்கத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் இது நிகழ்ந்துள்ளது. சுமார் 250 மில்லியன் மக்கள் வாழும் இந்த மாநிலத்தில் 80 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.