ஈரான் சனாதிபதி Ebrahim Raisi, வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian ஆகியோர் உட்பட 9 பேர் ஹெலி விபத்து ஒன்றில் பலியாகி உள்ளனர். Azerbaijan எல்லையோரம் உள்ள, மலை பகுதியிலேயே இந்த விபத்து கடும் மூடுபனி (fog) வேளையில் இடம்பெற்றுள்ளது.
அந்த மாநிலத்தின் ஆளுநரும், அவர்களின் பாதுகாவலரும் கூடவே பலியாகி உள்ளனர். அந்த ஹெலியில் இருந்த இஸ்லாமிய இமாம் ஒருவர் சுமார் 1 மணி நேரம் உயிருடன் இருந்து, அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முனைந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் பெரியதொரு அணைக்கட்டு ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் Tabriz என்ற நகரை நோக்கி பறக்கையிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதி சுமார் 7,218 அடி (2,200 மீட்டர்) உயரமான, வாகன போக்குவரத்து வசதி அற்ற மலை பகுதியாகும். அதனால் விபத்து இடம்பெற்ற பகுதியை அடைய பல மணி நேரம் தேவைப்பட்டது.
ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் விபத்துக்கு அனுதாபம் தெரிவித்து இருந்தாலும் மேற்கு நாடுகள் எதுவும் இந்த விபத்து தொடர்பாக கருத்து கூறவில்லை.
ஈரானில் தற்போது இடைக்கால சனாதிபதியும், வெளியுறவு அமைச்சரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.