கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இணையம் தற்போதும் பயண ஆசனங்களை விற்பனை செய்கிறது.

மே மாதம் 13ம் திகதி மீண்டும் மேற்படி கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று முதலில் கூறப்பட்டது. பின் இந்த சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மே மாதம் 17ம் திகதி ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் www.sailindsri.com என்ற இணையம் தொடர்ந்தும் பயண ஆசனங்களை விற்பனை செய்கிறது. பணம் செலுத்துவோர் தமது பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம்.

யுத்தத்துக்கு பின் இந்த சேவை கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தினங்களில் கொந்தளிப்பான கடலை காரணம் கூறி சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

சுமார் 110 km தூர பயணத்தை கடக்க இந்த கப்பல் சேவைக்கு 3.5 முதல் 4 மணி நேரம் வரை தேவைப்பட்டிருக்கும். நாகப்பட்டினத்தில் காலை 8:00 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, காங்கேசன் துறையை 12:00 மணிக்கு அடைந்து, பின் காங்கேசன் துறையில் பிற்பகல் 2:00 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து நாகப்பட்டினத்தை மாலை 6:00 மணிக்கு அடைய இருந்தது.