சீனா தலைமையிலான வங்கியில் இணைகிறது பிரித்தானியா

AIIB

1966 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் தலைமைகளில் ஆரம்பிக்கப்பட்ட Asian Development Bank இக்கு மாற்றீடாக ஒரு ஆசிய அபிவிருத்தி வங்கியை அமைக்க கடந்த வருடம் சீனா முன்வந்திருந்தது. முதலில் இலங்கை உட்பட சுமார் 20 நாடுகள் இந்த புதிய Asian Infrastructure Investment Bank இல் இணைய முன்வந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் ஆசிய நாடுகளாகவே இருந்தன.
.
அதேவேளை World Bank மற்றும் Asian Development Bank போன்ற அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா இதை எதிர்த்திருந்தது. இதை அவசியம் அற்ற ஒன்று என்றிருந்தது. ஜப்பானும் இதில் இணைய மறுத்திருந்தது.
.
தற்போது நிலைமை மாறி பிரித்தானியாவும் இந்த AIIB இல் இணைய முன்வருகிறது. இணைய முன்வந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவே இதில் இணையும் முதலாவது G7 நாடாகும். AIIB இல் இந்தியா, நியூசிலாந்து ஆகியனவும் இணையும். அத்துடன் தென்கொரியா AIIB இனது தலைமையகத்தை தென்கொரியாவில் அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
.
AIIB இன் ஆரம்ப முதலீடு சுமார் சுமார் $100 பில்லியன் ஆக இருக்கும். அதில் $50 பில்லியனை சீனா முதலிடும். அதேவேளை Asian Development Bank $175 பில்லியன் முதலீட்டை கொண்டுள்ளது. World Bank $220 பில்லியன் முதலீட்டை கொண்டுள்ளது.
.

அத்துடன் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா (BRICS) இணைந்து ஆரம்பித்த New Development Bank இலும் சீனா பங்கு கொண்டுள்ளது.