சிலவகை குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கிறார் அமெரிக்கா சனாதிபதி பைடென். அந்த குண்டுகளை இஸ்ரேல் சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக பயன்படுத்துகிறது என்ற அச்சமே காரணம்.
அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை நட்பு நாடுகள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமையவே பயன்படுத்த வேண்டும். தவறின் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க சட்டம்.
இந்த கிழமை பைடென் அமெரிக்க காங்கிரசுக்கும் இஸ்ரேல் எவ்வாறு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்துகிறது என்பதை சட்டப்படி தெரிவிக்க வேண்டும். சில அமெரிக்க திணைக்களங்கள் இஸ்ரேல் மேற்படி சட்டங்களுக்கு அமைய ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளன. இந்த அறிக்கைகளை பைடென் இலகுவில் மறைக்க முடியாது.
குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் 2,000 இறாத்தல் குண்டுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. மக்கள் நிறைந்த இடங்களில் இந்த குண்டுகள் பெரும் அழிவை ஏற்படுத்தும். இந்த குண்டுகள் குறிவைத்து தாக்க பயப்படுத்தப்படுவன அல்ல.
அகதிகள் நிறைந்து உள்ள காசாவின் Rafah நகருள் இஸ்ரேல் படையினர் நுழைவதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்காவின் விருப்பத்தையும் மீறி இஸ்ரேல் Rafah நகருள் நுழைய முற்படுவதே இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு காரணம்.
ஆனாலும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு (defence) தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என்றும் பைடென் கூறியுள்ளார்.