இலங்கைக்கான விசா வழங்கும் உரிமையை பெற VFS Global நிறுவனம் $10 மில்லியன் பணத்தை ரணிலின் வரும் தேர்தல் பணிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் Public Security அமைச்சர் Tiran Alles.
தான் இவ்வாறு செய்திகள் பரவுவதை அறிந்து உள்ளதாகவும் ஆனால் அது பொய் என்றும் கூறுகிறார் Tiran. தான் 5 சதமும் பெறவில்லை என்றும் அது மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னர் SAARC நாடுகளுக்கு $25 மட்டுமே உல்லாச பயணனிகளுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் அந்த $25 கட்டணத்தை நீக்கி, SAARC நாட்டவர் சிலருக்கு உல்லாசப்பயண விசா இலவசம் என்று கூறப்பட்டது.
ஆனால் VFS அறவிடும் $25 VFS சேவைக்கான கட்டணங்கள் SSARC நாட்டவருக்கான இலவச விசா என்ற கூற்றை பொய்யாக்கி உள்ளது.
தற்போதைய VFS Global சேவை காலம் 12 ஆண்டுகள் என்றும், அதற்கு VFS $200 மில்லியன் முதலிட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.