இந்திய RAW காடையாரை பயன்படுத்தி படுகொலைகள்?

இந்திய RAW காடையாரை பயன்படுத்தி படுகொலைகள்?

இந்திய RAW (Research and Analysis Wing) இந்திய வன்முறை குழுக்களை பயன்படுத்தி படுகொலைகள் செய்கிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் New York Times செய்தி நிறுவனம். கனடாவில் வைத்து Hardeep Singh Nijjar என்ற சீக்கியரையும் அவ்வாறே RAW படுகொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகிறது New York Times.

வெள்ளிக்கிழமை கனடாவில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் இந்திய குடியினர் என்றும் அவர்கள் வன்முறை குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

அமெரிக்காவில் இன்னொரு சீக்கியரை கொலை செய்ய எடுத்த முயற்சியும் வன்முறை குழுக்களை பயன்படுத்த முனைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேற்படி சந்தேக நபர்களின் குழு தலைவன் 31 வயது Lawrence Bishnoi 2014ம் ஆண்டு முதல் இந்திய சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கனடா 3 போரையும் கைது செய்த பின் இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் கனடாவை வன்மையாக சாடியுள்ளார்.

தென்னாசிய நாடுகளில் RAW இவ்வாறு வன்முறை கும்பல்களின் உதவியுடன் தனது நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் New York Times கூறுகிறது. ஆனால் அவ்வகை உதாரணங்கள் எதையும் New York Times தெரிவிக்கவில்லை.

இலங்கை யுத்தமும் RAW மூலமே செய்யப்பட்டது.