2012ம் ஆண்டு முதல் இலங்கை அரசு இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை ETA என்ற தனது இணையம் மூலமும் செய்து வந்தது. இந்த முறைமை எந்தவித இடர்களும் இன்றி இயங்கி வந்திருந்தாலும் ரணில் அரசு விசா வழங்கும் பணிகளை கடந்த மாதம் முதல் VFS Global என்ற நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
பரிசோதனை வெள்ளோட்டம் எதுவும் செய்யாது இரகசியமாக மறைத்து வைத்து திடீரென நடைமுறை செய்த VFS இணைய கட்டமைப்பு புதன்கிழமை சரிவர இயங்கவில்லை. அதனால் புதன்கிழமை வந்த பயணி ஒருவர் on-arrival விசா பெற முடியாது போக, அவர் சீறி சினந்துள்ளார். உடனே இலங்கை அதிகாரிகள் பழைய முறைமையை தற்காலிகமாக நடைமுறை செய்துள்ளனர்.
இதுவரை இலங்கை அரசு SAARC நாட்டவருக்கு $20 கட்டணமும், ஏனைய நாட்டவருக்கு $50 கட்டணமும் ஆறவிட்டு இருந்தது. Online கட்டணமான $2 உடன் விசா ஒன்றுக்கு மொத்தம் மட்டுமே $52 செலவானது.
ஆனால் VFS விசா கட்டணத்தை $75 ஆக உயர்த்தி, மேலதிகமாக $18.05 Convenionce Fee யும், facility fee $7.27 உம் சேர்த்து மொத்தம் $100.77 அறவிடுகிறது.
இலங்கை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2.3 மில்லியன் உல்லாச பயணிகளை உள்வாங்க உள்ளது. அதனால் VFS அறவிடும் $18.5 மில்லியன் கட்டணம் மட்டும் $42 மில்லியன் வருமானத்தை VFS Global என்ற அந்நிய நிறுவனத்துக்கு வழங்கும். ஏன் இந்த வருமானம் கடனில் மாண்டுள்ள இலங்கைக்கு செல்லக்கூடாது? குழப்பம் இன்றி இயங்கிய பழைய ETA முறைமை ஏன் கைவிடப்பட்டது?
மறுபுறம் VFS ஒரு இந்திய நிறுவனம் என்பதையும், VFS அரசியல் அழுத்தம் மூலம் இலங்கையில் விசா வழங்கும் உரிமையை பெறவில்லை என்றும் உண்மைகளை மூடி மறைக்க முனைகிறது கொழும்பில் உள்ள இந்திய தூதரகம்.
VFS Global நிறுவனம் இந்தியரான Zubin Karkaria என்பவரால் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. Zubin தற்போது டுபாயில் வாழ்ந்தாலும் இவர் ஒரு இந்திய குடியுரிமை கொண்டவர். இவர் University of Mumbai யில் கல்வி கற்றவர்.
இவரின் VFS Global தற்போது வர்த்தக வசதிக்கு ஏற்ப டுபாயில் தலைமையகத்தை கொண்டுள்ளது.