இன்று வெள்ளிக்கிழமை முதல் அஸ்ரேலிய பல்கலைக்கழகங்களிலும் காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை அதிகாரிகள் அகற்றும் நோக்கத்தில் தற்போது இல்லை.
University of Sydney வளாகத்தில் கடந்த கிழமை ஆரம்பிக்கப்பட்ட முகாம் இடல் தற்போது Melbourne, Canberra உட்பட பல இடங்களுக்கும் பரவி உள்ளது.
Council of Australian Jewry காசா ஆதரவு முகாம்களை அகற்றுமாறு கேட்டிருந்தாலும், பல்கலைக்கழக அதிகாரிகள் அவ்வாறு செய்ய மறுத்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா போல இங்கும் சிறிதளவு யூத மாணவர்களும், விரிவுரையாளரும் காசா முகாமுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
கடந்த மாதம் Zomi Frankcom என்ற காசாவில் பணியாற்றிய தொண்டர் நிறுவன உறுப்பினர் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மேலும் 6 பேருடன் பலியாகி இருந்தனர்.