உலகை வலம்வரும் solar விமானம்

SolarImp2

Solar Impulse 2 என்ற solar சக்தியில் இயங்கும் சிறிய விமானம் ஒன்று உலகை சுற்றி வலம்வரும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை அபுதாபி நேரப்படி திங்கள் காலை 7:12 ஆரம்பித்துள்ளது. இது Borchberg மற்றும் Piccard ஆகிய இருவரினதும் 13 வருட முயற்சியின் பயனாகும். இந்த இருவருமே ஒவ்வொருவராக இதை இயக்குவர்.
.
அபுதாபியில் இருந்து ஓமான், இந்தியா, பர்மா, சீனா, ஹவாய், நியூ யோர்க் ஊடாக 12 இடங்களில் தரையிறங்கி மீண்டும் அபுதாபியை சுமார் 25 நாட்களில் அடையும். சீனாவில் இருந்து ஹவாய் வரையிலான பறப்பே மிக நீண்ட தொடர்ச்சியான பறப்பாக இருக்கும்.
.
இதன் இறகுகளின் எல்லைக்கு எல்லையான நீளம் 72 மீட்டர் ஆகும். இது 2.3 தொன் நிறை கொண்டதாகும். 17,000 solar துண்டுகளை கொண்ட இந்த விமானம் நான்கு 17.5 HP வலுக்களை கொடுக்கக்கூடிய மின் இயந்திரங்களை கொண்டுள்ளது.
.
இதன் வேகம் 50 முதல் 100 mph ஆகும். இது 28,000 அடி உயரம்வரை செல்லவல்லது.
.