Janet Yellen என்ற அமெரிக்காவின் திறைசேரி செயலாளரும், Antony Blinken என்ற வெளியுறவு செயலாளரும் அண்மையில் சீனா சென்று தமக்கு சாதகமான இணக்கங்களை ஏற்படுத்த தவறிய நிலையில் ஞாயிறு திடீரென சீனா சென்ற Tesla நிறுவன அதிபர் Elon Musk தனது நோக்கங்களை நிறைவேற்றி உள்ளார் என்கிறது Reuters செய்தி நிறுவனம்.
Tesla சீனாவின் Baidu என்ற global positioning நிறுவனத்தின் உதவியுடன் Full Self-Driving (FSD) EV வாகனங்களை சீனாவில் நடைமுறை செய்ய அனுமதி பெற்றுள்ளது. Baidu மூலம் இந்த வாகன தரவுகளை அமெரிக்காவுக்கு அனுப்பவும் அனுமதி பெற்றுள்ளது.
இந்த நம்பிக்கையிலேயே Musk இறுதி நேரத்தில் இந்தியாவை புறக்கணித்து சீனா பறந்தாரா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.
உலகம் எங்கும் அமெரிக்காவின் GPS தொழில்நுட்ப கட்டமைப்பை பயன்படுத்த, சீனா தனது Baidu என்ற கட்டமைப்பையே பாதைகளை அறிய பயன்படுத்துகிறது. பாதுகாப்பு கருதி சீனாவில் அமெரிக்காவின் GPS சேவை கிடையாது.
Musk சீனா சென்ற விமானம் தற்போது அமெரிக்காவின் அலாஸ்கா நோக்கி பறக்கிறது என்றும் கூறப்படுகிறது.
Tesla சீன அரசின் அனுமதி பெற்றாலும், BYD, Xiaomi, Xpeng போன்ற சீனா EV (Electric Vehicle) தயாரிப்புகளுடன் போட்டியிட முடியாது தவிக்கிறது.