இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காசாவில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சில அமெரிக்க State Department பிரிவுகள் தமது உள் அறிக்கைகளில் கூறியுள்ளன.
வரும் மே 8ம் திகதி அமெரிக்க வெளியுறவு செயலாளர் Blinken அமெரிக்க காங்கிரசுக்கு இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறதா என்பதை அறிவிக்க வேண்டும்.
ஆனால் மார்ச் 24ம் திகதி வரையில் குறைந்தது 7 திணைக்கள பிரிவுகள் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று options memo மூலம் Blinken னுக்கு கூறியுள்ளன.
இவ்வாறு கூறிய பிரிவுகளில் Democracy Human Rights & Labor bureau, Population, Refugees and Migration bureau, Global Criminal Justice bureau, International Organization Affairs bureau ஆகியனவும் அடங்கும்.
இந்த பிரிவுகள் குறைந்தது 8 குற்றங்களை இஸ்ரேல் இராணுவம் மீது சுமத்தியுள்ளன. அந்த குற்றச்சாட்டுகளில்;
1. மீண்டும் மீண்டும் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களை தாக்குதல் மற்றும் பொதுமக்கள் இடங்களை தாக்குதல்.
2. இராணுவ முன்னேற்றத்துக்காக அளவுக்கு அதிகமான பொதுமக்கள் அழிவுகளை ஏற்படுதல்.
3. இஸ்ரேல் இராணுவம் செய்யும் குற்றங்களை விசாரிக்க மிக குறைந்த அளவில் நடவடிக்கை எடுத்தல்.
4. தொண்டர் நிறுவன பணியாளர்களையும், பத்திரிகையாளரையும் அளவுக்கு அதிகமாக கொலை செய்தல்.
ஆகியனவும் அடங்கும்.