அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் அன்ரொனி பிலிங்கன் (Antony Blinken) மீண்டும் சீனா சென்றுள்ளார். இன்று புதன் சீனா சென்ற இவரின் முதலாவது நோக்கம் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் உறவை முறிப்பதே.
யூக்கிரேனில் ரஷ்யா செய்யும் யுத்தம் 3 ஆண்டுகளாக தொடர்வதற்கு பிரதான காரணம் மேற்கு ரஷ்யாவின் இராணுவ பலத்தையும், பொருளாதாரத்தையும் முறிக்க முடியாமல் உள்ளமையே. சீனாவின் உதவியுடனேயே ரஷ்யா தனது இராணுவத்தையும், பொருளாதாரத்தையும் மேற்கின் தடைகளுக்கு அப்பால் வளர்ச்சி அடைய செய்கிறது.
இன்று புதன் முதல் வெள்ளி வரையிலான 3 தினங்களில் Blinken ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் சீன அதிகாரிகளை சந்தித்து உரையாடுவர்.
தாய்வான், தென் சீன கடல், Tik Tok, electric vehicle ஆகிய பல விசயங்களும் கூடவே உரையாடப்படும். இவை ஏற்கனவே பல தடவைகள் உரையாடப்பட்ட, ஆனால் இணக்கம் காணப்படாத விசயங்கள்.
பிலிக்கனுக்கு முன் அமெரிக்க Treasury செயலாளர் Yellen மேற்படி விசயங்கள் தொடர்பாக உரையாட பெய்ஜிங் சென்றிருந்தார். அந்த பயணமும் இணக்கம் எதையும் வழங்கியிருக்கவில்லை.
அமெரிக்கா ஒருபுறம் சீனாவுக்கு எதிராக அணிகளை வளர்த்து, மறுபுறம் சீனாவுடன் நலமான உறவை கொண்டிருக்க முனைவதை சீனா சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறது.
2024ம் ஆண்டுக்கான ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி 3.2% ஆக இருக்கும் என்று IMF அண்மையில் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கு எதிரான மேற்கின் பல்லாயிரம் தடைகள் அங்கு பொருளாதார வீழ்ச்சியையே எதிர்பார்த்தன.