அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் எங்கும் காசா யுத்தம் மோதல்களை உருவாக்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் தடைகள், கைதுகள், வகுப்பு முடக்கங்கள் என்று முரண்பாடுகள் தொடர்கின்றன.
Yale University வளாகத்தில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு மாணவர் ஆர்ப்பாட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். New York University யிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Columbia பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. California State Polytechnic பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Harvard University சில மாணவரை இடைநிறுத்தம் செய்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பெருமளவு நன்கொடை செய்யும் செல்வந்த யூதர்கள் பதிலுக்கு அந்த பல்கலைக்கழகங்கள் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு கொள்கைகளையே கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்தனர். இவர்களின் ஆதிக்கம் அமெரிக்க அரசியலிலும் உண்டு.
ஆனால் தற்கால பல இன பல்கலைக்கழக மாணவர் காசாவில் இடம்பெறுவது அநீதி என்ற கருத்தை கொண்டுள்ளனர். இஸ்லாமியர் மட்டுமன்றி வெள்ளை, கருப்பு மாணவர்களும் இதில் பெருமளவில் அடங்குவர். பல விரிவுரையாளரும் மாணவருடன் இணைந்துள்ளனர்.