இலங்கைக்கு IMF வழங்கும் $2.9 பில்லியன் கடனின் அடுத்த பகுதியான $337 மில்லியன் கடன் வழங்கல் பின்போடப்படலாம் என்று .நம்பப்படுகிறது.
இலங்கை பிற அரசுகளிடம் இருந்து பெற்ற கடன்களை அடைக்க இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தாலும், bond மூலம் பெற்ற கடன்களுக்கு இதுவரை இணக்கங்கள் ஏற்படவில்லை. அதனால் IMF வழங்கும் கடனின் அடுத்த வழங்கல் பிந்தலாம் என்று கருதப்படுகிறது.
Bond மூலம் கடன் வழங்கியோர் தம் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதை ஏற்க மறுக்கின்றனர்.
இந்த இழுபறியால் இலங்கையின் bond சுமார் 2.5% பெறுமதியால் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியும் சிறிதளவு குறைந்துள்ளது.
கரோனா காரணமாக தடைபட்ட உல்லாச பயணிகளின் வருமானமும், மத்திய கிழக்கு ஊழியர்களின் வருமானமும் மீண்டும் கிடைக்க ஆரம்பித்ததை தவிர வேறு எந்த முன்னேற்றமும் இலங்கை வருமானத்தில் இல்லை.