அமெரிக்காவின் Treasury Secretary Janet Yellen பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள குறைபாடுகளை சீன உயர் அதிகாரிகளுடன் உரையாட 4-தின பயணம் ஒன்றை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார்.
அந்த பயணம் இன்று திங்கள் இணக்கங்கள் எதுவும் இன்றி முடிந்துள்ளது. ஆனாலும் இருதரப்பும் பேச்சுக்களை தொடர இணங்கியுள்ளன.
அமெரிக்காவில் இது தேர்தல் ஆண்டு ஆகையால் பைடென் அரசு நல்ல பொருளாதார செய்திகளை அமெரிக்க மக்களுக்கு வழங்க விரும்புகிறது. ஆனால் சீனா அதற்கு மசியவில்லை.
குறிப்பாக மின்னில் இயங்கும் வாகன (EV) சந்தை, சூரிய சக்தியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் சந்தை ஆகியவற்றில் சீன நிறுவனங்கள் உலக அளவில் அமெரிக்க நிறுவனங்களை பின்தள்ளி வருகின்றன.
சீன EV வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவது இல்லை என்றாலும் ஐரோப்பாவில் சீனாவின் BYD அமெரிக்காவின் Tesla வை பின்தள்ளி வருகிறது. தரம், மலிந்த விலை, மேலதிக வழங்கல்கள் ஆகிய BYD வளர்ச்சிக்கு காரணமாகின்றன. தற்போது சீனாவின் Xiaomi யும் போட்டிக்கு வந்துள்ளது.