சுமார் 2.8 மில்லியன் வருட பழமைவாய்ந்த, 5 பற்களை கொண்ட தாடை எலும்பு ஒன்று எதியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்பை எதியோப்பிய நாட்டை சார்ந்தவரும், அமெரிக்க Arizona State University பட்டதாரி மாணவனுமான Chalachew Seyoum இரண்டு வருடங்களின்முன் கண்டு எடுத்திருந்ததார்.
.
.
விஞ்ஞான ஆய்வின்படி இந்த எலும்புக்குரிய இனம் ஹோமோசேப்பியன் (Homo-sapiens) என்ற மனித இனத்துக்கு சிலபடிகள் முன்னைய இனமாக கருதப்படுகிறது. அதாவது இந்த எலும்பு மனித குரங்கு வகையில் இருந்து மனித இனம் தோன்றிய காலத்துக்கு உரியது என கணிக்கப்பட்டுள்ளது.
.
.
இதுவரை இந்த இனம் சுமார் 2,3 முதல் 2.4 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதாகவே கருதப்பட்டு இருந்தது.
.
இந்த ஆய்வுகளின்படி தற்போதைய மனித இனம் சுமார் 400,000 வருடங்களின் முன் தோன்றியதாக விஞ்ஞானத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
.
.
இந்த ஆய்வுகளின்படி தற்போதைய மனித இனம் சுமார் 400,000 வருடங்களின் முன் தோன்றியதாக விஞ்ஞானத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
.
எதியோப்பியாவின் Hadar பகுதியில் இருந்து மனித குரங்கையொத்த மனித மூதாதையின் எலும்புக்கூடு ஒன்று முன்னர் கண்டு எடுக்கப்பட்டு இருந்தது. அந்த எலும்புக்கூடு சுமார் 3.2 மில்லியன் வருட பழமை வாய்ந்தது என்று கணிக்கப்பட்டு இருந்தது. அந்த எலும்புக்கூடு Lucy என்று அழைக்கப்படும்.