செங்கடல் ஊடு செல்லும் தமது கப்பல்கள் கூதி (Houthi) ஆயுத குழுவால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் கூதியுடன் இணக்கம் ஒன்றை செய்துள்ளன.
இஸ்ரேல்-காமாஸ் யுத்தம் ஆரம்பம் ஆகிய பின் கூதி ஆயுத குழு காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல், அமெரிக்க, பிரித்தானிய கப்பல்கள் மீது தாக்குதல்களை செய்து வருகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளும் கூதி மீது பதில் தாக்குதல்களை செய்து வருகின்றன.
இதனால் பல கப்பல் நிறுவனங்கள் செங்கடல் பாதையை தவிர்த்து, ஆபிரிக்காவை சுற்றி ஐரோப்பாவை அடைகின்றன. இதனால் பயண செலவும் அதிகரித்து, பயண காலமும் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும், சீனாவும் பதிலுக்கு கூதியை ஐ.நா. அமர்வுகளில் பாதுகாக்கலாம்.